Manjapai : தாத்தா- பேரன் செண்டிமெண்டை வொர்க்-அவுட் செய்த ராஜ் கிரண்- விமல்..9 வருடங்களை கடந்த மஞ்சப்பை!
ஸ்ரீஹர்சக்தி | 06 Jun 2023 01:48 PM (IST)
1
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் விமல். பல தமிழ் படங்களில் நடித்துள்ள விமலின் விலங்கு சிரீஸ் மாபெரும் ஹிட்டானது.
2
ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமி மேனன்,ராஜ்கிரண் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மஞ்சப்பை. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
3
தென்மேற்கு பருவகாற்று, நீர் பறவை, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம், அயோத்தி போன்ற படங்களுக்கு இசையமைத்த என்.ஆர். ரகுநந்தன், இப்படத்திற்கும் இசையமைத்தார்.
4
விமல் - லட்சுமி மேனன் இடையேயான காதலும் மோதலும், தாத்தா- பேரன் செண்டிமெண்ட்டும், ராஜ் கிரணின் சுட்டித்தனமான நடிப்பும் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.
5
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்து நல்ல வசூலையும் ஈட்டியது இப்படம்.
6
இன்றுடன் மஞ்சப்பை படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிவிட்டன.