Thangalaan Update : தங்கலான் வெளியீடு எப்போது..? ரிலீஸ் தேதியை அறிவிக்க ரெடியான படக்குழு..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தங்கலான். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் சந்தித்த சிரமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதையே தங்கலான் படம் .
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட் 118 நாட்கள் நடைபெற்றது.
சுதந்திரத்துக்கு முன்பு இருந்த வரலாற்றை கூறும் படமாக தங்கலான் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மூன்று தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடன் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.