Dhruva Natchathiram : யூடியூப் ட்ரெண்டிங்கில் துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்!
கடந்த 2013 ஆண்டில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து சூர்யாவின் லைனப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகியதாலும் கால்ஷீட் கிடைக்காததாலும் இப்படம் சூர்யாவிடம் இருந்து கைநழுவி நடிகர் விக்ரமிடம் சென்றது.
இதனை அடுத்து துருவ நட்சத்திரம் படத்தின் சூட்டிங் பணிகள் நடைபெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கெளதம் மேனன். ரித்து வர்மா, ராதிகா சரத்குமார் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 இல் தொடங்கப்பட்ட சூட்டிங் பணிகள் நிறைவடைந்து.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட பண சிக்கலால் இப்படம் தொய்வு நிலையில் இருந்தது. துருவ நட்சத்திரம் படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நிகழ்ச்சி மேடையில் பேசிய பொழுது, “துருவ நட்சத்திர போஸ்ட் புரடக்ஷன் பணிகளுக்காக பண தேவைகள் உள்ளதால் சில வருடங்களாக நான் அதிகமாக படங்களில் நடித்துவருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. படத்திற்கு தேவையான பணம் தற்பொழுது இருப்பதால் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது” என குறிப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 24 அன்று வெளியாகும் என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று வெளியான துருவ நட்சத்திரத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வைரலாக பரவி தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது.
துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.