Veera Dheera Sooran : விக்ரமின் வீர தீர சூரன் படப்பிடிப்பு இனிதே இன்று தொடங்கியது!
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்பவர் நடிகர் விக்ரம்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஆதித்ய கரிகாலன்' கதாபாத்திரமாக அவர் நடிப்பு பாராட்டுக்களை குவித்தார்
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் படமான 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அடுத்ததாக சித்தா படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். இது விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு வீர தீர சூரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
விக்ரமுடன் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.