Vijay : இனிமே 3 வருடத்திற்கு விஜய் நடிக்க போவதில்லையாம்.. வருத்ததில் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்!
தென்னிந்திய திரையுலகிலை கலக்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ்நாட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இவர் பிறந்தநாள் அன்று 12 மணி அளவில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதே நாளின் மாலை பொழுதில் லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “நா ரெடி”பாடல் வெளியானது.
நா ரெடி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை அந்த பாடலின் வீடியோ 4 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார். அரசியல் ரீதியாக அனல் பறக்க பேசிய விஜய்யின் வீடியோ ட்ரெண்டாகியது.
தற்போது 2026 ஆம் ஆண்டின் தேர்தலை கருத்தில் கொண்டு திரைப்படம் நடிப்பதில் இருந்து விஜய் மூன்று விலக உள்ளதாக தகவல் பரவிவருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -