The Goat Update : ரொமாண்டிக் பாடல் ஒன்னு வரப்போகுது.. எப்போது தெரியுமா?
ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய், சினேகா, பிரபு தேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கிவருகிறார்.
வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே, இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானார்.
இந்த படம் டைம் ட்ராவல் சைன்டிபிக் ஜானரில் என்பதால், டி ஏஜிங் டெக்னாலஜி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சென்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “விசில் போடு” வெளியாகியிருந்தது. விஜய், பிரபு தேவா, பிரசாந்த் நடனம் சிறப்பாக இருந்தாலும் இப்பாடல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் தி கோட் படத்தின் அப்டேட்டை, எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பலரும் இயக்குநரிடம் கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக வெங்கட் பிரபு, ஜூன் 22 என சின்ன ஹிண்ட் கொடுத்தார்.
தற்போது ஜூன் 22 ஆம் தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும், அது ரொமாண்டிக் பாடலாக இருக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது.