Leo Promotion : எங்கும் எதிலும் லியோ..ப்ரோமோஷனில் படு பிசியான லோகேஷ் கனகராஜ்!

லியோ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வந்த முதல் நாளிலிருந்து, இணையம் முழுவதும் லியோ மயமாக இருந்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பூஜையில் தொடங்கி, படக்குழுவினர் பற்றிய தகவல்கள், ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், கதை சொல்லும் ஸ்பெஷல் போஸ்டர்கள், ட்ரெய்லர், மூன்றாவது சிங்கிள் ஆகியவை அடுத்தடுத்து வெளியானது

அக்டோபர் 19 ஆம் தேதியன்று வெளியாகும் லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.
பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, சமூக வலைதளத்தில் படம் குறித்து பதிவிடுவது, போஸ்டர்களை பொது போக்குவரத்து வாகனத்திலும் வாகனம் நிறுத்தும் இடத்திலும் ஒட்டுவது, மக்கள் கூடும் இடத்தில் படக்காட்சிகளை திரையிடுவது, ட்ரெய்லரை திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் திரையிடுவது, ஸ்பாட்டிஃபையுடன் இணைந்து விளம்பரம் செய்வது என தீயாய் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
முன்னதாக, லியோவின் பிரிமீயர் காட்சி, 18 ஆம் தேதியன்று திரையிடப்படலாம் என கமலா சினிமாஸ் பதிவிட்டது. ஆனால், இது குறித்த அப்டேட் எதுவும் வரவில்லை.
அக்டோபர் 19 ஆம் தேதியன்று காலை 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு வாய்ப்பில்லை என தமிழக அரசு உத்தரவிட்ட பின், விஜய் ரசிகர்கள் பலர் அதிகாலை சிறப்பு காட்சி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -