Jason Sanjay : அப்பாவின் வழியில் மகன்.. இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்!

சுபாஸ்கரன் - ஜேசன் சஞ்சய்
தமிழ்நாட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்ய ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.
விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா ரீதியான படிப்பை படித்து வந்தார். இவர் இயக்கி நடித்த குறும்படத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பேசு பொருளானது.
கூடிய விரைவில் இவரும் சினிமா நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம்.
லைகா தயாரிப்பில் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் ஒப்பந்த பத்திரத்தை கையெழுத்திட்ட புகைப்படத்தை லைகா நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் யார் நடிப்பார்கள் என்றும் விஜய் 70 படமே ஜேசனின் முதல் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.