Yaadhum oore yaavarum kelir : ‘விடை கொடு எங்கள் நாடே..’ அகதிகளின் கதையை விவரிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பட விமர்சனம் இங்கே!
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் தடைகளை தாண்டி 2 ஆண்டுகளுக்குப் பின் வரும் மே 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் விளக்கும் படமாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைந்துள்ளது.
புனிதன் என்ற பெயரில் வலம் வரும் இலங்கை தமிழரான விஜய் சேதுபதி தன்னுடைய இலக்கை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ்திருமேனி, விஜய் சேதுபதியை கொல்ல நினைக்கிறார். இதற்கு காரணம் என்ன? இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்? என்பதே இப்படத்தின் கதையாகும்.
அகதிகள் பற்றியும் அவர்களின் கஷ்டங்கள் என்ன என்பதை சொல்ல முயன்ற இப்படம் அதில் பாதியளவே வெற்றி பெற்றிருக்கிறது. வசனங்கள் சபாஷ்! பின்னணி இசை ரசிக்கும்படி உள்ள நிலையில் பாடல்கள் தேவையில்லாத ஒன்றாகவே உள்ளது.
மொத்தத்தில் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்க்கையின் வலிகளை சொன்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரவேற்கத்தக்க படங்களில் ஒன்று..!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -