Vijay sethupathi : ஹெச்.வினோத் இயக்கத்தில் விக்ரமுடன் மீண்டும் இணைகிறாரா சந்தனம்?
கமல்ஹாசன் அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கதில் உருவாக இருக்கும் படம் கமல் 233. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இதற்கு முன்னர் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
ஒவ்வொரு படத்திலும் கதைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதி, சந்தனமாக அசத்தியிருந்தார்.
இந்த படத்திலும் புதியதொரு கதாபாத்திரத்தில் நடித்து அப்லாஸ்களை அள்ளுவார் என்ற நம்பிக்கை விஜய் சேதுபதியின் ரசிகர்களின் மத்தியில் உள்ளது.