5 years of Kaala: 'ஆகாயம் சாயாம தூவானமேது.. ஆறாம ஆறாம காயங்கள் ஏது..' 5 ஆண்டுகளை கடந்த காலா!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் காலா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமும்பை தாராவியில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையை பேசியிருந்த இப்படம் ரஜினியின் வழக்கமான படங்களில் இருந்து சற்று மாறுபட்டே இருந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், திலீபன், அரவிந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
நிலம் பற்றிய அரசியல், காதல் மற்றும் நகைச்சுவை என கலக்கி இருந்த காலா வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -