Sai pallavi : ‘பூவுக்கு பொறந்த நாளு பொண்ணாக நீ மலர்ந்த நாளு..’ சாய் பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
2015ல் ப்ரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி, அதற்கு முன்பே கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் நடித்த மலர் கதாபாத்திரத்தில் நடிகை அசின் நடிக்கவிருந்தாராம். பின்னர் அல்போன்ஸ் புத்திரன், முகநூலில் சாய் பல்லவியின் பழைய வீடியோவை பார்த்து அவரை மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளார்.
ஜார்ஜியா நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவருக்கு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஜார்ஜியன், தெலுங்கு ஆகிய மொழிகளில் சரளமாக பேச தெரியுமாம்.
இயற்கை அழகி சாய் பல்லவிக்கு 2019ல் ஃபேர்னஸ் க்ரீம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அனைத்து நிறங்களும் அழகுதான் என கூறி அந்த 2 கோடி ரூபாய் விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
ரவுடி பேபி படத்தில் சூப்பர் நடனம் ஆடிய சாய் பல்லவி, சிறு வயதிலேயே பல கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். அத்துடன், ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ மற்றும் ‘தி அல்டிமேட் டான்ஸ் ஷோ’ ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார்.
சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -