Vijay Devarakonda: கண்டிஷனுடன் காதல்! ராஷ்மிகா மீதனா காதலை ஓபனாக கூறிய விஜய் தேவரகொண்டா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோருக்கு பிறகு அதிகளவில் பிரபலமானார். அதற்கு முக்கிய காரணம் அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம், போன்ற மாஸ் படங்கள் தான். இந்தப் இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் விஜய் தேவரகொண்டாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகீத கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட்டான நிலையில், இந்த ஜோடி மீண்டும் 'டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தது. இதன் மூலமாக இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது 35 வயதாகும் விஜய் தேவரகொண்டா இதுவரையில் தனது திருமணம் குறித்து அறிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு குஷி படத்தில் சமந்தா உடன் இணைந்து நடித்திருந்தார். காதல் கதையை மையப்படுத்தி இந்தப் படம் வெளியானது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் திருமணம் பற்றி பேசியிருந்தார்.
அதில், பார்க்க ரக்கடானவராக இருந்தாலும் அவர் ரொம்ப மரியாதை தெரிந்தவர், ஒழுக்கமானவர். எந்தவித கெட்ட பழக்குமும் இல்லை. நேரத்துக்கு தூங்கி எழுந்துவிடுவார். எனக்கு காதல் கதை போர் அடிச்சாலும் அவருக்கு காதல் கதைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். இந்த வருடத்தில் அவர் எப்படியும் திருமணம் செய்து கொள்வார். அதுவும் அவரோட கேர்ள் பிரண்டு தான். ஒவ்வொரு வருடமும் இந்த வருடம், அடுத்த வருடமுன்னு சொல்லிக் கொண்டு தான் இருப்பார். ஆனால், 3 மாசத்துல கல்யாணம் பண்ணிடுவார் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை கல்யாணம் ஆன பாடில்லை.
இந்த நிலையில் தான் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள சஹிபா என்ற ஹிந்தி ஆல்ப நிகழ்ச்சியின் புரோமோஷனில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் காதல் லைஃப் பற்றி பேசியிருக்கிறார். எனக்கு இப்போ 35 வயதாகிறது. நான் என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட் செய்திருக்கிறேன். நான் சிங்கிளாக இருப்பேனு நினைக்கிறீங்களா? என கேள்வி எழுப்பினார்.
எனக்கு காதல் என்றால் ரொம்பவே பிடிக்கும். அது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும். என்னோட காதலுக்கு சில கண்டிஷனும் இருக்கும் என்று கூறியுள்ளார். அவர் சக நடிகையுடன் டேட்டிங் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளதால் அது கண்டிப்பாக ராஷ்மிகா மந்தனா தான் என கன்ஃபாம் செய்து விட்டனர் ரசிகர்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -