Allu Arjun Networth: அம்மாடி!! சிரஞ்சீவிக்கே டப் கொடுப்பார் போலயே - சொத்து மதிப்பில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!
தெலுங்கு திரையுலகின் ஐகான் ஸ்டாரான அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் பல ஹிட்களைக் கொடுத்திருந்தாலும், புஷ்பா திரைப்படம் அவருக்கு பிளாக்பஸ்ட்ர் ஹிட்டைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தால் வெறும் தேசிய விருது மட்டுமல்ல, அல்லு அர்ஜுனுக்கு ஜாக்பாட்டும் சேர்ந்து அடித்தது என்றே கூற வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுஷ்பா படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பு அல்லு அர்ஜுனை ஐகான் ஸ்டாரில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. இதனால் தனது சம்பளத்திலும் சில கோடிகளை தாரளமாக ஏற்றியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள புஷ்பா 2 படத்திற்கு 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் 460 கோடியாக உயர்ந்துள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பங்களா ஒன்று உள்ளது. மல்டி மில்லியனர்கள் வசிக்கக்கூடிய காஸ்ட்லியான ஏரியாவில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவின் மதிப்பே 100 கோடி ரூபாயாம். மேலும் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள, டபுள் பெட்ரூம் லக்சரி அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிகராக மட்டுமல்ல தனது தயாரிப்பு நிறுவனமான அல்லு ஸ்டுடியோவில் இருந்து கோடிகளை அள்ளுகிறார். இது தவிர, கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் AAA சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் ஒன்றையும் திறந்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பிரபல அமெரிக்க விளையாட்டு பார் மற்றும் ஃபுட் செயினான பஃபலோ வைல்ட் விங்ஸின் உரிமையாளராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி ஹேர் கேர், ஆஹா ஓடிடி மற்றும் சில டாப் பிராண்ட்களின் விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார். இதன் மூலமாக ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டுகிறார்.
இன்ஸ்டாகிராமில் 26 மில்லியனுக்கும் அதிகமானபாலோயர்களைக் கொண்ட அல்லு அர்ஜுன் சோசியல் மீடியா விளம்பரங்கள் மூலமாகவும் ஆண்டுக்கு சில கோடிகளை அள்ளி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -