Pichaikkaran 2 trailer : தொழிலதிபரா..சாமியாரா.. பிச்சைக்காரன் 2 வில் விஜய் ஆண்டனியின் பின்னணி என்ன?
கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பெரிதாக கவனமீர்த்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தப் படத்தை சசியோ வேறு இயக்குநர்களோ இயக்கப்போவதில்லை என்றும், விஜய் ஆண்டனியே இயக்குவார் என்றும் தகவல் வெளியானதுடன் படப்பிடிப்பு தொடங்கி மலேசியாவில் தொடங்கியது
காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்றே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படம் மீது வழக்கு தொடுக்கப்பட்டதால் ரிலீஸ் வரும் மே 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று வெளியான ட்ரெய்லரில், பிரபல தொழிலதிபர், குற்றவாளி, பக்திமான் என விஜய் ஆண்டனி பல கெட்டப்பில் தோன்றுகிறார். இவரின் அசத்தலான தடதடக்கும் பின்னணி இசை சுவாரஸ்யமூட்டும் வகையில் அமைந்துள்ளது.