லியோவிற்கு பின் விஜய்யுடன் இணையப்போவது யார்..பரவி வரும் தளபதி 68 அப்டேட்!
ABP NADU | 19 Apr 2023 04:37 PM (IST)
1
வாரிசு படத்டதை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ படத்தில் நடித்து வருகின்றார்.
2
நீண்ட காலத்திற்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து நடிக்கின்றனர்.
3
லியோவில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
4
லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தை அட்லி இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
5
விஜய் - அட்லி கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றி பெற்றது . இந்த வெற்றி கூட்டணி மிண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
6
அதேசமயம் வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மல்லினேனி, விஜய்யை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும், அதை விஜய் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் பரவிவருகிறது.