Vicky gifts Nayan : இத்தனை கோடி ரூபாயா?? மனைவிக்கு விலை உயர்ந்த உயர்ரக காரை பரிசளித்த விக்கி!

நயன்தாராவிற்கு பரிசளித்த விக்னேஷ் சிவன்
நானும் ரவுடிதான் படிப்பிடிப்பு காலத்தில் காதலில் விழுந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து சினிமா உலகை கலக்கி வரும் நயன், பிசினஸ் உலகிலும் கால்தடம் பதித்தார்
எப்போதும் கேமராவிற்கு முன் நடிக்கும் நயன், சில நாட்களுக்கு முன்னர் கேமராவிற்கு பின் நின்று வேலை பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு மக்களின் ஆர்வத்தை தூண்டினார்
தற்போது இவரின் பிறந்தநாளுக்கு, விக்னேஷ் சிவன் மேபாக் எனும் உயர்ந்த உயர்ரக காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்த மேபாக் காரானது இந்தியாவில் 2 கோடி ரூபாய் முதல் 3.5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காரின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, விக்கிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்.
நயனின் நடிப்பில் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள அன்னபூரணி படம் நாளை (டிசம்பர் 1) வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.