Viduthalai Audio Trailer Launch : முதன்முதலாக ஹீரோவாக களமிறங்கும் சூரியின் விடுதலை படத்தின் புது அப்டேட்!
தனுஷ்யா | 03 Mar 2023 03:39 PM (IST)
1
தேசிய திரைப்பட விருதுகளை குவித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றி மாறன், விடுதலை படத்தை இயக்கியுள்ளார்.
2
இப்படத்தில், முதன் முதலாக சூரி கதாநாயகனாக களம் இறங்குகிறார். இப்படத்திற்காக, ஜிம்மிற்கு சென்று, ஃபிட்டாக மாறினார்.
3
இந்திய சினிமாவில் ரவுண்டு கட்டி வரும் விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
4
இப்படத்தின் ஷூட்டிங் போது, சண்டை காட்சி இயக்குநர் சுரேஷுக்கு விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக அவர் உயிர் இழந்தார்.
5
சீரியஸான கதையில், கதாநாயகனாக களமிறங்கும் சூரியின் இப்படம் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
6
தற்போது, விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர், மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது.