Viduthalai Part 1 : வாத்தியாரின் எழுச்சிக்காக காத்திருக்கும் விடுதலை பட ரசிகர்கள்!
ABP NADU | 01 Apr 2023 04:38 PM (IST)
1
இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட விடுதலை படம் நேற்று திரைக்கு வந்தது.
2
சூரியின் வேறுப்பட்ட நடிப்பை காண சென்ற மக்கள், படம் பார்த்த பின்னர், “சூரி நடிக்கவில்லை..அப்படத்தில் குமரேசனாக வாழ்ந்துள்ளார்.” என கூறினர்.
3
விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், தனது ஸ்க்ரீன் பிரசன்ஸால் அனைவரையும் திருப்தி அடைய செய்துள்ளார். அடுத்த பாகத்தில், வாத்தியாரின் எழுச்சி உதயமாகும்.
4
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி நடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கையாவார்.
5
நகைச்சுவை நடிகராக இருந்த இவருக்கு, விடுதலை படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
6
இரண்டாம் பாகத்திற்கான களத்தை உருவாக்கும் கதையாக முதல் பாகம் அமைந்துள்ளது.