Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமாருக்கு இந்து முறைப்படி 4-ஆவது திருமணம் முடிஞ்சிடுச்சா? வைரலாகும் புகைப்படம்!
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் பற்றிய செய்திகள் தான் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு செய்தி தான் இப்போதும் வந்திருக்கிறது. அது அவருடைய 4ஆவது திருமணம் பற்றிய செய்தி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஏற்கனவே ஆகாஷ், ராஜன் ஆனந்த் ஆகியோரை திருமணம் செய்த நிலையில் அவர்களை விவாகரத்து பெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சிங்கிளாகவே இருந்தார். இந்த நிலையில் தான் 3ஆவதாக 2000ஆம் ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அப்போது இருவரும் லிப் டூ லிப் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வைரலானது.
ஆனால், அவருடனான திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மூன்றே மாதத்தில் அவரை பிரிவதாக அறிவித்தார். ஒரு சில வருடங்களில் பீட்டர் பாலும் இறந்துவிட்டார். அதன் பிறகு வனிதா விஜயகுமார் பிஸியான நடிகராகவிட்டார்.
கலக்கபோவது யாரு நடுவர், குக் வித் கோமாளி சீசன் 2 என்று பிஸீயாக இருந்தார். என்னதான் அவர் பிஸீயாக நடித்துக் கொண்டிருந்தாலும் 4ஆவது திருமணம் எப்போது, மாப்பிள்ளை யார் என்ற கேள்விகள் தான் அவரை சுற்றும் வந்தது. ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாத வனிதா விஜயகுமார் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தோட டீஸர் வெளியாகி வைரலான நிலையில் சுப முகூர்த்தம் என போஸ்டர் வெளியான நிலையில். தற்போது வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் சுப முகூர்த்தம் என்கிற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், தாலி கட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும், ராபர் மாஸ்டர் வனிதாவிற்கு தாலி கட்டிய பிறகு அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால், அதே அளவிற்கு என்ன 4ஆவது திருமணமா? என்ற கேள்வி எழுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. உண்மையில் அவர்கள் இருவரும் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் காட்சி தான் இந்த திருமணம் காட்சி. இந்த திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தோட வீடியோ சாங் ஸ்டார் மியூசிக் யூடியூப் சேனலில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வனிதாவின் திருமண காட்சியை அவரது மகள் ஜோவிகா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -