Sneha: பட்ட அசிங்கம் அப்படி; போட்ட ட்ரெஸ்ஸை ரிப்பீட் பண்ண கூடாதுனு முடிவெடுத்த நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சினேகா எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். மாதவன் நடிப்பில் வந்த என்னவளே படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, ஜனா, ஆட்டோகிராஃப், வேலைக்காரன் என்று ஏராளமான படங்களில் நடித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாகவே அமைந்தது. விஜய், அஜித், கமல் ஹாசன், தனுஷ், சூர்யா, சேரன் என்று எல்லோ நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிளாமருக்கு நோ சொன்ன நடிகைகளில் சினேகாவும் ஒருவர்.

புன்னகை அரசி என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் கொடுத்த காலமும் உண்டு. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
பார்ப்பதற்கு அழகாக தெரியும் சினேகா மீது சில ஹீரோக்களுக்கு கிரஷ் இருந்தது. 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அச்சமுண்டு அச்சமுண்டு படம் மூலமாக பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர்.
குழந்தை பிறந்த பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்த நிலையில் வரும் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் சினேகா குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. அதாவது, அவர் ஒருமுறை அணிந்த ஆடையை திரும்பவும் அணியமாட்டாராம். அப்படியென்றால் நாள்தோறும் புது புது ஆடைகளை தான் அணிவாராம். இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அதாவது, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் ஒரே மாதிரியான உடையை பயன்படுத்தியதைக் கண்டு பத்திரிக்கையில் அவரிடம் வேறு உடை இல்லையா? எப்போதும் ஒரே உடையை அணிந்து வருகிறார் என்று கூறி அசிங்கப்படுத்துவது போல விமர்சித்திருக்கின்றனர்.
அதன் பிறகு தான் அவர் நாள் தோறும் புது புது உடைகளை அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உடைகளுக்கும், இவரின் புடவை தேர்வுகளுக்கும் இருக்கும் டிமாண்ட் காரணமாக தற்போது சினேகாலையா என்கிற ஜவுளி கடையையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -