Vanangaan Teaser : அருண் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில்.. 5 மணிக்கு வெளியாகும் வணங்கான் டீசர்!
தனுஷ்யா | 19 Feb 2024 03:44 PM (IST)
1
நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக பணியாற்றிய பாலா - சூர்யா காம்போ நீண்ட நாள் கழித்து வணங்கான் படம் மூலம் இணைவதாக அறிவிப்பு வந்தது.
2
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார் என்ற தகவலும் அரசல் புரசலாக வந்தது.
3
பின்னர், படக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால், சூர்யா அப்படத்தை விட்டு விலகினார்.
4
படம் கைவிடப்படவுள்ளது என்ற தகவல் பரவிய போது, சூர்யாவிற்கு பதில் அருண் விஜய் நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வந்தது.
5
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வணங்கான் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
6
அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.