BAFTA Awards : 77வது ஃபப்டா திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களின் பட்டியல் இதோ!
சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA) ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 7 பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்தது ஓப்பன்ஹைமர் (oppenheimer) திரைப்படம்.
சிறந்த நடிகை, சிறந்த மேக்கப் & சிகையலங்காரம்,சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு, சிறந்த தயாரிப்பு என 5 பிரிவுகளின் கீழ் விருதை பெற்றது பூவர் திங்ஸ் (Poor things) திரைப்படம்.
பொது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ரைசிங் ஸ்டார் விருதை ப்ரூஸ் (Bruce) படத்திற்காக மியா மெக்கன்னா பெற்றார்.
சிறந்த துணை நடிகைகான விருதை டாவின் ஜாய் ரேண்டால்ஃப் 'தி ஹோல்டவோர்ஸ்' (The Holdvores ) படத்திற்காக பெற்றார்.
சிறந்த ஆங்கில குறும்படம் விருதை ஜெல்லி ஃபிஷ் அண்ட் லேப் ஸ்டார் (jelly fish and lap star) திரைப்படம் வென்றது.
சிறந்த ஆங்கில திரைப்படம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என்ற பிரிவின் கீழ் 'தி ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்' (The Zone of Intrest ) திரைப்படம் வென்றது.
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) விருது அனாடமி ஆஃப் ஃபால் திரைப்படம் வென்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -