Vadivelu Speech : ‘நடித்த என்னையே அழ வைத்த காட்சிகள்.. 50 வது நாள் விழாவில் மனம் திறந்த நடிகர் வடிவேலு!
திரைக்கு வந்து 50 நாட்களை கடந்து உள்ள மாமன்னன் படத்தின் 50 வது நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், “இப்படத்தில் எனக்கு நான்கு காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது. அது என்னை தூங்க விடவில்லை.” என கூறினார்.
“மலை உச்சியில் நின்று அழுகும் காட்சிகளை, நானே தியேட்டரில் ஆடியன்ஸாக இருந்து வேறு ஒருவரை போன்றுதான் அந்த காட்சியை பார்த்து அழுதேன்” - வடிவேலு
“இடைவேளை காட்சியில் இருவரும் பைக்கில் செல்லும் சீன் வரும், அதில் மகனுக்கும் அப்பாவிற்கும் உள்ள உறவை அழகாக காட்டிருப்பதை ரசித்தேன்” - வடிவேலு
“அதன்பிறகு மனைவியின் காலை பிடித்துக்கொண்டு பேசும் காட்சியும் பிடித்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அந்த காட்சியை குறிப்பிட்டு என்னிடம் பேசினர்” - வடிவேலு
“கடைசியில் தேர்தலில் வெற்றி பெற்ற பின் உதயநிதியிடம் பேசும் காட்சியும் பிடித்தது.”-வடிவேலு
இப்படி அவர் ரசித்த காட்சிகளை மீண்டும் அனைவரின் கண் முன்னே கொண்டுவந்த பின்னர் மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்தார் வடிவேலு.