LEO : ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகி வரும் லியோ படம்.. ஒரு படம் எடுக்க இத்தனை கேமராவா?
கொரோனா காலத்திலேயே லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் வெளிவந்து பயங்கர வரவேர்பை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் இந்த காம்போ இணைந்தது.
அதனை தொடர்ந்து, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்போஸ்டரில், விஜய்யின் உருவ படம் ரத்த கோளத்தில் காணப்பட்டது.
ரசிகர்களுக்கு அடுத்து அடுத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பது லோகேஷ் கனகராஜின் வழக்கமாகும். அதற்கேற்றவாரு இப்படத்திற்கு லியோ என்ற மாஸ் பெயரை வைத்து ரசிகர்களை மகிழ்வித்தார்
இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங், கேஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
ஹாலிவுட் தொழில் நுட்பமான வி ராப்டார் எக் எல் ரெட் கெமிராவை ( V-Raptor XL Red camera) கொண்டு பிரமாண்டமாக படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இப்படம் எல்.சி.யூ வின் அங்கமாக இருக்கலாம் என்று ரசிகர்களால் டிகோட் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, ரசிகர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர் இணையத்தில் இப்போதும் வைரல் ஆகிவருகிறது.