Upcoming Tamil movies : ‘இருக்கு பெரிய சம்பவம் இருக்கு..’ இந்தாண்டில் வெளியாகவிருக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்!
ஜெயிலர் : இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலரில் தமன்னா, சஞ்ஜய் தத், ஜாக்கி ஷராஃப் முதலிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலியோ : மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் படம் இது. இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்தியன் 2 : ஷங்கர் நடிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 வின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும்.
கேப்டன் மில்லர்: இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஷ்வரன், ராக்கி, சானி காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர்.
ஜப்பான்: குக்கூ, ஜோக்கர்,ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் கார்த்தியை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.
மாமன்னன்: ஃபஹத் ஃபாசில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியவர்கள் நடித்திருக்கும் படம் மாமன்னன். கர்ணன் பட இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
கங்குவா : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் கங்குவா. இது பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய அளவில் உருவாகும் படம் ஆகும்.
அயலான் : இன்று நேற்று நாளை படத்தில் அறிமுகமான இயக்குநர் ரவிகுமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருக்கும் படம் அயலான். ஏலியன் சைன்ஸ் பிக்ஷன் கதையே அயலான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -