Trisha Leo Look : ஒரு வழியா வந்தாச்சு.. 8 மாதங்களுக்கு பிறகு திரிஷா லுக்கை வெளியிட்ட லியோ படக்குழு!
பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் குந்தவை எனும் கதாபாத்திரத்தை திரிஷா மூலம் கண்முன் காட்டினார் மணிரத்னம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்த திரிஷா, விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் முன்னதாக வந்தது.
அந்த தகவலை மெய்ப்பிக்கும் வகையில், கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி வரிசையில் விஜய்யுடன் ஐந்தாவது முறை இணைந்தார் திரிஷா. இவர்கள் இருவரும் இருக்கும் இந்த புகைப்படம் வைரலானது.
image 3
அதன் பின், லியோ படக்குழுவினரின் லுக் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாக, திரிஷாவின் லுக்கை மட்டும் கண்ணிலே காட்டாமல் வைத்தார் லோகேஷ் கனகராஜ். லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் வெளியாகி திரிஷா ரசிகர்களை ஆறுதல் படுத்தியது.
திரிஷா இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று வெளியான பின், சுமார் 8 மாதங்கள் கழித்து திரிஷாவின் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டரிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லியோவை பற்றி எதையும் அறியாத திரிஷாவின் கதாபத்திரம், முதன்முறையாக அவரின் சுயரூபத்தை பார்த்து ஷாக் ஆகிறது என்பதும் இதில் தெரிகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -