Trisha : கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரீல் இளவரசி குந்தவை..உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த த்ரிஷா, மாடலிங் செய்ய தொடங்கினார். மிஸ் சேலம், மிஸ் சென்னை பட்டத்தை ஆகிய பட்டங்களை பெற்று விளம்பர படங்களில் நடித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1999ல் ஜோடி படத்தில் ஹீரோயினின் தோழியாக ஒரு ஓரத்தில் நின்ற த்ரிஷா, 2002ல் வெளிவந்த மெளனம் பேசியதே படத்தில் சந்தியாவாக அசத்தினார்.
தனலட்சுமி, ஜெஸ்ஸி, ஹெமானிகா, ருத்ரா, ஜானு போன்ற சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தார். பின் மணிரத்னத்தின் இளவரசி குந்தவையாக நடித்து இளசுகளின் மனதில் குடிகொண்டார்.
கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி போன்ற படங்களில் நடித்த ஹிட் காம்போ மீண்டும் லியோ படத்தில் இணையவுள்ளது.
மே 4 ஆம் தேதியான நேற்று பிறந்த த்ரிஷா, கேக் வெட்டி அவரின் தினத்தை கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் அன்று சாய் பாபாவை தரிசித்த த்ரிஷாவின் புகைப்படம்.
நேற்று தொடங்கிய வாழ்த்து மழை இன்றும் பொழிந்து வருகிறது. அத்துடன் இவரின் புது புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -