Jawan Release : தள்ளிப்போகும் ஷாருக் படத்தின் ரிலீஸ் தேதி...ஜெயிலருக்கு போட்டியாக களமிறங்குகிறதா ஜவான்?
தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே பெரும் வெற்றி கண்ட இயக்குநர் அட்லீ, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக விஜய்யை வைத்து பல ப்ளாக் பஸ்டர் ஹிட்களை கொடுத்தார்.
இந்த வரிசையில் பாலிவுட் பக்கம் எட்டிப்பார்த்த அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சன்யா மல்ஹோத்ரா என பலரும் நடித்து வருகின்றனர்.
பான் இந்திய அளவில் இப்படம் வெளியாகவுள்ளதால் இதன் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் பரவி வந்தது. தற்போது, ஜவானின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியாகலாம். ஆகஸ்ட் மாதத்தில் போலா ஷங்கர், அனிமல், ஜெயிலர், கடார் 2 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.