Travel tips : ட்ரிப் செல்லும் போது உடல் சோர்ந்து விடுதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
அன்றாட வேலை அலுப்பில் இருந்து விடுபட இன்றைய இளைஞர்கள் பலர் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appட்ரிப் சென்று வந்தவுடன் ஒரு விதமான புத்துணர்ச்சியும் நல்ல அனுபவமும் நினைவுகளும் கிடைக்கும். அத்துடன் பழகுவதற்கு புதிய வட்டாரமும் கிடைக்கும்.
சுற்றுலா செல்லும் போது வெகுதூரம் பயணிக்கும் அவசியம் இருக்கும். அப்போது உடலின் ஆற்றல் குறைந்துவிடும். பயணத்தின் போது உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி எழுந்து கொள்ள வேண்டும். சரியான தூக்கம் இல்லையென்றால் உடல் சோர்ந்துவிடும்
தேவையான தண்ணீரை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடலை, பாதாம், பிஸ்தா என ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
பசிக்கவில்லை என்று சாப்பிடாமல் இருக்க வேண்டாம். பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்
ட்ரிப் செல்வதற்கு 1 வாரம் முன் உடற்பயிற்சி செய்து உடலை ரெடியாக்கி கொள்ளுங்கள். அப்போது நடக்க, மலை ஏற, நீச்சல் செய்ய வசதியாக இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -