Top Picks Today : தோனி கொடுத்த பேட் முதல் சச்சினுடன் சூர்யா வரை.. இன்றைய வைரலான செய்திகள் இதோ!
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, யோகி பாபுவிற்கு, தனது பயிற்சியில் பயன்படுத்திய பேட்டினை பரிசாக கொடுத்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுடன் புகைப்படம் எடுத்து, அதை அவரின் சமூக வலைதள பக்கங்களில் சூர்யாவே ஷேர் செய்துள்ளார்.
வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில், வாரிசு படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். நடன பயிற்சியின் போது சல்மான் கானுடன் போட்டோ எடுத்த ஜானி மாஸ்டர், அதை பகிர்ந்துள்ளார்.
கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி பொறுத்தவரை, இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஹிந்தியில் டப் செய்யப்பட்ட துணிவு, பான் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சக நடிகர்களுடன் போட்டோ எடுத்து, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கியது என விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார்.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மமான முறையில் காணாமல் போனது குறித்த ஆவணப்படத்தை நெட்ஃபிக்ஸ் வெளியிட உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -