2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படங்கள்.. முதல் இரண்டு இடங்களை பிடித்த ஷாருக்கான்!
இந்த திரைப்பட வரிசையில் முதல் திரைப்படமாக அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் உலக அளவில் 1150 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
இதே வரிசையில் நடிகர் சாருக்கானின் பதான் திரைப்படம் 1050 கோடி ரூபாயை வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் கதர் 2 திரைப்படம் 690 கோடி ரூபாயை வசூல் செய்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் உலக அளவில் 610 கோடி ரூபாயை வசூல் செய்து இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 605 கோடி ரூபாயை வசூல் செய்து இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக இந்த தரவரிசை பட்டியலில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதி புரூஷ் திரைப்படம் 410 கோடி ரூபாயை வசூல் செய்து ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாயை வசூல் செய்து இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.