Cinema Updates: கில்லிக்கு 16 வயது-விவேக் இறந்து 2 ஆண்டுகள் நிறைவு..மேலும் பல சினிமா அப்டேட்டுகள்..இதோ!
சில நாட்களுக்கு முன்பு கர்பமாக இருக்கும் நடிகை சனா கானை அவரது கணவர் இழுத்துக் கொண்டு செல்வது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, இந்த வீடியோவிற்கு சனா கான் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், “கூட்டம் அதிகமாக இருந்ததால் வியர்த்து மூச்சு விட முடியாமல் போனதாகவும் இதனால் எனக்கு தண்ணீர் கொடுப்பதற்காகத்தான் எனது கணவர் என் கையை பிடித்து சென்றார்” எனவும் தெரிவித்துள்ளார்.
சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சிம்புவின் 48 ஆவது படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கில்லி படம் வெளியாகி 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை சமூக வலைதளத்தில் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார், அதன் பிறகு பெரும் சர்ச்சை எழுந்ததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால், ஸ்லம் டாக் மில்லியனர் பட நடிகர் மதுர் மிட்டல் இதில் நடித்துள்ளார்.
நடிகர் விவேக் இந்த உலகை விட்டு மறைந்து 2 வருடங்கள் ஆகின்றது. விவேக்கின் நினைவை ரசிகர்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.