GP Muthu : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி முத்து..என்ன ஆச்சு தலைவருக்கு என புலம்பும் ரசிகர்கள்!
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரவுடி பேபி சூரியா போன்ற சக டிக்டாக்கர்களுடன் இணைந்து டூயட் பாடி பலராலும் ட்ரால் செய்யப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் பங்கேற்ற இவர், குடும்பத்திற்காக அந்த நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியேறினார்.
இவர் பேசும் திருநெல்வேலி வட்டார மொழிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். யூடியூபில், ரசிகர்கள் அனுப்பும் கடிதங்களை படித்து பயங்கர பிரபலமானார்.
படங்களுக்காக ப்ரோமோஷன் செய்து வந்த இவர், படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கோமாளியாக பங்குபெற்று அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.
தற்போது, உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -