In Pics : அரசியல் முதல் ஐபிஎல் வரை..இந்த வாரத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்!
அவதூறு வழக்கில் தண்டனை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை நேற்று காலி செய்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிமுக மீது சரமாரி ஊழல் குற்றச்சாற்றை சுமத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சொத்து விவரங்களை நேற்று வெளியிட்டார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பின் தொடங்கியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். தற்போது, மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது.
தான் கர்ப்பமாக இருந்தபோது எந்தப் புகைப்படங்களும் பகிராமல் ரகசியம் பேணி வந்த ஸ்ரேயா, முதன்முறையாக தான் கருவுற்றிருந்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படத்தை வாழ்த்தி ரஜினிகாந்த் ட்வீட் செய்தார்
லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், “லியோ சிறப்பான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். 60 நாள்கள் முடிஞ்சது, 60 நாள்கள் இன்னும் ஷூட்டிங் இருக்கு” என லோகேஷ் தெரிவித்தார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து அப்டேட்டுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார். 22 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறக்கும் புகைப்படம் ஒன்றை கமல் வெளியிட்டார்.
அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தின் செட்டில் செல்ஃபி எடுத்த ராஷி கண்ணா.
நடிகை குஷ்புவையும், அவரது மாமியாரையும் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி சந்தித்தார். இது குறித்து, குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கான மோதலில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் 5 பந்துகளிலும் 5 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார் ரிங்கு சிங்.
பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் இடையிலான போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாக, ஓப்பனராக களமிறங்கிய ஷிகர் தவான் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை- ராஜஸ்தான் இடையிலான போட்டியில் 17 பந்துகளில் 37 ரன்களை விளாசினார் தோனி.
ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் இடையிலான போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 228 ரன்களை அடித்திருந்தது. அதில் 100 ரன்கள் ஹாரி ப்ரூக் மட்டுமே அடித்தார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்தது.
நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -