Thug life Simbu : சிம்புவா இது? பார்பதற்கு அயன் பட கமலேஷ் போல் இருக்காரே!
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்தினம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 வருடத்திற்கு பிறகு உருவாகிவரும் படம் தக் லைஃப்.
முன்பு கூறியிருந்தது போல படத்தில், சிம்பு, திரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், அபிராமி, நாசர் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கேங்ஸ்டர் படமான தக் லைஃபிற்கு மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்
படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகி வைரல் ஆகிய நிலையில், இன்று முக்கிய அறிவிப்பு வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல், தக் லைப் படத்தில் நடிக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் சிம்பு பார்ப்பதற்கு அயன் பட கமலேஷ் போல் இருக்க, வீடியோ என்னவோ, செக்க சிவந்த வானம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நினைவுக்கு கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது.
தக் லைக் படத்தில், சிம்புவின் லுக்கை பார்த்த பலர், “சிம்பு நல்லவரா? கெட்டவரா? கமல்ஹாசனுக்கு மகனா?” என கமெண்ட் செய்து வருகின்றனர். சிம்பு நடிக்கும் கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.