HBD Janani : விண்மீன் விதையில்...தெகிடி பட நடிகை ஜனனிக்கு இன்று பிறந்தநாள்!

ஜனனி
ஜனனி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்த போதும், சினிமாவுக்காக அதை அப்படியே விட்டுவிட்டார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமாரின் துணை இயக்குநராக, சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்
பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பேபி எனும் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்
அதனை தொடர்ந்து தெகிடி படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். அப்படத்தில் இடம்பெற்ற விண்மீன் விதையில் பாடல் மிகவும் ஃபேமஸானது
வரிசையாக மலையாள மொழி படங்களில் தமிழ் படங்களிலும் மாற்றி மாற்றி நடித்து வருகிறார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றும் நான்காவது இடத்தை பிடித்தார். இது போக மாடலிங் செய்து கொண்டு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.