HBD Jayakandhan : 'வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் ..' எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்தநாள் இன்று!
ABP NADU | 24 Apr 2023 04:35 PM (IST)
1
ஜெ.கே என்று அழைக்கப்படும் ஜெயகாந்தன், பிரபல தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ஆவார்.
2
இவர், 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
3
இவரது இயற்பெயர் முருகேசன் என்பதாகும். இவரது பல நாவல்கள் மற்றும் கதைகள் படங்களாக உருப்பெற்றுள்ளது.
4
ஜெ.கே, இந்திய இலக்கிய உலகில் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஆவார்.
5
மேலும் இவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் சாகித்திய அகாதமி விருது மற்றும் பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
6
தமிழ் எழுத்துலகின் இமயம் என்று அழைக்கப்படும் ஜெயகாந்தன் அவர்களை அவரது பிறந்தநாள் அன்று நினைவு கொள்வோம்.