25 Years of Jeans: ‘50 கே.ஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா..’அனைத்து அதிசயங்களும் ஒரே திரையில் காண்பித்த ஜீன்ஸ் படத்திற்கு 25 வயது!
ஜீன்ஸ் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகி விட்டது. இந்த நாளில் இப்படம் குறித்த அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்வேம்.
1998ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய படங்களில், ஜீன்ஸ் படம்தான் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்தது.
நாசரின் கதாப்பாத்திரத்தில் கவுண்டமணியை நடிக்க வைப்பதாக இருந்தது. அது முடியாமல் போனதால், காமெடி படமாக இருக்க வேண்டியது காதல் படமாக மாறியது.
அப்பாஸ் அல்லது அஜித்தைதான் இப்படத்தில் நடிக்க வைப்பதாக இருந்தது. கடைசியில் பிரசாந்த்தான் இப்படத்தில் நடித்தார்.
ஜீன்ஸ் படத்தில் நடிப்பதற்காக, பிரசாந்த் 7 படங்களை புறக்கணித்து ஒன்றரை வருடத்தை இப்படத்தில் நடிப்பதிலேயே செலவிட்டார்.
ஐஸ்வர்யா ராய்க்கு இப்படத்தில் அம்மாவாக நடித்திருந்த ஜானகி சபாஷ், அவரை விட 4 வயதுதான் மூத்தவர்.
உலகில் உள்ள ஏழு அதிசயங்களையும் ஒரே பாடலில் காட்டிய படம், ஜீன்ஸ் மட்டும்தான்.
ஐஸ்வர்யா ராயின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிக்க, எஸ். பி. பாலசுப்பிரமணியத்திடம் பேச்சு வார்த்தை நடந்தது. அதன் பிறகு, அந்த கதாப்பாத்திற்காக எஸ்.வி.சேகர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த படம், தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளது.
25 ஆண்டுகளுக்கு பிறகும், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் புதுமையான அனுபவத்தை தரும் படம்தான் ஜீன்ஸ்.