Tamil Movies : ஜூலை 13 ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள்!
திருப்பதிசாமி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த நரசிம்மா படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படத்தில் விஜயகாந்த் தீவிரவாதிகளை அழிக்கும் சிறப்பு ராணுவ வீரராக நடித்து இருந்தார்.
ஷாம், சினேகா நடித்து வெளிவந்த படம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. இப்படத்தை வசந்த் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான படம் தில்.படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி டி எஸ் பி சாகர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சக்ரி டொலெட்டி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து இருந்த படம் பில்லா 2. அகதியாக தமிழ் நாட்டுக்கு வரும் அஜித் குமார் எப்படி பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாண்டிராஜ் இயக்கி கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வெளியாகி 6 வருடங்கள் நிறைவடைகிறது. இது இன்றும் குடும்பங்கள் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது