Tamil Movies : சமுத்திரம் முதல் மங்காத்தா படம் வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்து வெளிவந்த படம் சமுத்திரம். இப்படத்தில் முரளி, மனோஜ் பாரதிராஜா, அபிராமி, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்திருந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபடத்தில் அண்ணன்-தம்பி உறவு, அண்ணன் - தங்கச்சி உறவு மிகவும் உருக்கமாக இருக்கும். இப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த படம் மங்காத்தா. இப்படத்தில் அர்ஜுன், பிரேம்ஜி, வைபவ், ராய் லட்சுமி, மகத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
ஹவாலா பணம் 500 கோடி வருவதை அறிந்துகொண்டு ஒரு கும்பல் அதனை திருட முயற்சி செய்கின்றனர். இந்த கும்பலோடு அஜித் குமாரும் சேர்ந்து திருடுகிறார். பணத்தை திருடியதும், அந்த கும்பலில் அசம்பாவிதம் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீத கதை. இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த படம் முகமூடி. இப்படத்தில் நரேன், பூஜா ஹெக்டே, நாசர், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இது தமிழில் எடுக்கப்பட்ட முதல் சூப்பர் ஹீரோ படமாகும். இப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -