Cinema Updates : லாரன்ஸிற்கு ஜோடியாகவுள்ள சீதா ராமம் நடிகை.. இன்றைய சினிமா அப்டேட்ஸ்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த படத்தின் ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளார் என்றும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வரும் படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் மிக தீவிரமாக இயக்கி வருகிறார். இந்நிலையில், பாண்டிச்சேரியில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜாவில் இருந்து “தாயே தாயே” என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வருகின்ற ஜுன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஏ ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாக் டவுன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.