Cinema update : சூர்யா 44 படத்தின் அடுத்த அப்டேட் என்னன்னு தெரியுமா?
ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படம் குட் பேட் அக்லி. படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட போவதாகவும் அறிவித்துள்ளது.
பெயரிடப்படாத சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகிய நிலையில் தற்போது படத்தின் 2 பாடல்கள் சூட்டிங் முடித்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் மாதம் 10 தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்துள்ள கல்கி 2898 AD படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள அந்தகன் படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது