Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vijayakanth Demise Condolence : மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் சினிமா பிரபலங்கள்!
“எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் தளங்களில் தடம் பதித்த புரட்சித் கலைஞர் நம் நினைவுகளில் நிலைத்திருப்பார்.”என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு கமலஹாசன் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதனை இழந்துவிட்டோம் - நடிகை குஷ்பு
“அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தார் என்ற செய்தி இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி புரட்சி கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த்.” - டி.ராஜேந்தர்
“அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” - சரத்குமார்
“உங்கள் நினைவிக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை. அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை இனி எப்போதும் காண்போம் கேப்டன்.” - ஏ.ஆர். முருகதாஸ்
மிகவும் அன்பான, அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் மறைந்தது வருத்தம் அளிக்கிறது என நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேப்டனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். பிரேமலதா மேடம் மற்றும் அவரது குடும்பத்தினர் உறுதியாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். உங்கள் கருணை குணத்தை நான் என்றென்றும் நினைவில் கொள்வேன் கேப்டன் - திரிஷாவின் இரங்கல் பதிவு
“எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம் வருந்துகிறேன் கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” - கவிஞர் வைரமுத்து
“கள்ளலழகர்”என்னுடைய முதல் படம், லெஜண்ட் விஜயகாந்த் சார் கொடுத்த பரிசு.. என்னுடைய ஸ்டில் அவர் கண்ணில் பட்டது, பின் அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். கேப்டன் கொடுத்த சினிமா வாழ்க்கைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.. உங்களை மிஸ் செய்வேன்.”- நடிகர் சோனு சூத்
“அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன்..” - மாரி செல்வராஜ் இரங்கல்
“உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..! தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!! அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!! இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…! அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..! கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…! வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!! அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!!” - நடிகர் நெப்போலியன்
“தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர்.. ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர். நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். 'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்.. கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”-சிவகுமார்
நமது ‘புரட்சிக் கலைஞர்’ ‘கேப்டன்’ விஜயகாந்த் இப்போது இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர், வெகுஜனங்களின் நாயகன், ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதி. அவர் நேராக தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர். அன்பான ‘கேப்டன்’ நம்மை விட்டு வெகு சீக்கிரத்தில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்று விட்டார்! அவரது ஏராளமான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” - சிரஞ்சீவி
“கேப்டன் விஜயகாந்த் அண்ணா இறந்துவிட்டார் என செய்தி கேள்விப்பட்டேன். அண்ணா என்ன மன்னிச்சிடுங்க. இந்த நேரத்துல உங்க கூட இருக்க முடியல.. உங்க முகத்த ஒரு முறை பாத்து, உங்க கால தொட்டு கும்பிட்டு உங்க கூட இருந்து இருக்கணும். நான் வெளிநாட்டுக்கு வந்தது என் தப்பு. நான் உங்க கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 20 வருஷன் முன்னாடி நான் கேள்விப்பட்டு இருக்கேன், யாராவது பசியோடி வந்தா நீங்க சோறு போட்டு அனுப்புவீங்க. இந்த சமுதாயத்துக்கு இவ்வளவு பண்ணி இருக்கீங்க. ஒரு நல்ல மனிதர இழந்தத என்னால ஜீரணிக்க முடியல. அரசியல்வாதியா உங்க செயல்பாடு, ஒரு மனிதரா நீங்க பேர் வாங்கி இருக்கீங்க. உங்க பேர்ல கண்டிப்பா மேற்கொண்டு நல்லது பண்ணனும்” என கண்ணீர் மல்க அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் விஷால்.
“செய்தியைக் கேட்டு மனம் உடைந்தது. அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல ரியல் ஹீரோவும் கூட. அவரை என் சகோதரராக பார்த்தேன். ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் பெயரும் புகழும் நிலைத்து இருக்கும்.” - சிம்பு
“தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” - சிவகார்த்திகேயன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -