Kadhalikka Neramillai : காதலிக்க நேரமில்லை படக்குழு கொடுத்த புது அப்டேட்!
ABP NADU | 27 Dec 2023 04:14 PM (IST)
1
கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
2
வணக்கம் சென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு கிருத்திகா இயக்கிய காளி திரைப்படம் சரியாக ஓடாமல் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது.
3
இதனை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸை இயக்கினார்.
4
இந்த வெப் தொடரும் எதிர்பார்த்த அளவில் சரியாக ஓடவில்லை. தற்போது கிருத்திகா உதயநிதி நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
5
முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் பாடல் காட்சிகள் அடுத்த மாதம் ஷூட் செய்யப்படவுள்ளது என்ற தகவல் பரவிவருகிறது.
6
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.