Amman Movies List : தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த அம்மன் படங்கள்!
1995 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் வரும் ஜண்டா என்ற வில்லனை பார்த்தால் இன்றைக்கும் 90ஸ் கிட்ஸ் பயப்பட செய்வார்கள். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக வில்லனாக நடித்து இருந்தார்.
மீனா, ராம்கி, திவ்யா உன்னி, சரண்ராஜ் ஆகியோர் நடித்திருந்த பாளையத்தம்மன் படத்தை ராமா நாராயணன் இயக்கி இருந்தார். படத்தில் இடம்பெற்ற வேப்பிலை வேப்பிலை, ஆடி வந்தேன், பாளையத்தம்மா நீ பாச விளக்கு பாடல்கள் இன்றைக்கும் திருவிழாக்களில் ஒலிக்கப்படுகிறது.
2000 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகாளியம்மன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக அம்மனாக நடித்து இருந்தார் ரம்யா கிருஷ்ணன். வடிவேலு, கௌசல்யா, சரண், கரண் ஆகியோர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படம் மற்றும் பாடல்கள் மெகா ஹிட் ஆனாது.
ராமா நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது அம்மன் படம் கோட்டை மாரியம்மன். கரண், தேவயானி, ரோஜா, விவேக் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரோஜா அம்மன் கதாபாத்திரை ஏற்று நடித்து இருந்தார்.
விஜயசாந்தி அம்மனாக நடித்த படம் பண்ணாரி அம்மன் . இப்படம் 175வது படமாக விஜயசாந்திக்கு அமைந்தது. பாரதி கண்ணன் இயக்கிய அம்மன் கதாபாத்திரத்துக்கு விஜயசாந்தி உயிர் கொடுத்தார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு நேர்த்தியாக நடித்து இருந்தார்.
2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்த இருந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படம் ஹிந்தியில் வெளியான PK என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.