Pongal Celebration Clicks : பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய பிரபலங்கள்
நடிகர் அருண் விஜய் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். சமீபத்தில் இவர் நடித்த ரெட்ட தல திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது .
சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது
திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது புதிய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மகன் இன்பநிதி , இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஆகியோ குடும்பத்துடன் தங்கள் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்
நடிகர் கார்த்தி சோலோவாக பொங்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது
நடிகர் சாந்தனு மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார்கள்
நடிகர் சதீஷ் தனது மனைவியுடன் பொங்கல் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்