எப்போதுமே நாங்க டபுள்ஸ் தான்; நயன்தாரா, விக்னேஷ் சிவன் தடுப்பூசி காட்சிகள்!

தடுப்பூசி பெறும் நயன்தாரா
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டனர். மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருப்போம் என்றும் கேட்டுக் கொண்டனர்
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இதுவும் கடந்து போகும், தடுப்பூசி எடுத்துக் கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்
'நானும் ரவுடி தான்' திரைப்படத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து பணியாற்றினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தார நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது
நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் முன்னதாக போட்டுக் கொண்டார்
விக்ரம் திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்