7 Aum Arivu : சூர்யாவை புதிய பரிமாணத்தில் காட்டி ஏ.ஆர்.முருகதாஸ்... 12 ஆண்டுகளை கடந்த ஏழாம் அறிவு!

7 Aum Arivu : சூர்யா - ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்த ஏழாம் அறிவு படம், இதே நாளில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது

Continues below advertisement
7 Aum Arivu : சூர்யா - ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்த ஏழாம் அறிவு படம், இதே நாளில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது

ஏழாம் அறிவு படத்தின் ஸ்டில்

Continues below advertisement
1/6
தீனா, ரமணா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக சூர்யாவுடன் கைக்கோர்த்து கஜினி படத்தை இயக்கினார். இதே காம்போ, மீண்டும் இணைந்து ஏழாம் அறிவு படத்தை உருவாக்கியது.
தீனா, ரமணா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக சூர்யாவுடன் கைக்கோர்த்து கஜினி படத்தை இயக்கினார். இதே காம்போ, மீண்டும் இணைந்து ஏழாம் அறிவு படத்தை உருவாக்கியது.
2/6
கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக அறிமுகமானார். ஹாரிஸ் ஜெயராஜ் ஏழாம் அறிவு படத்துக்கு இசையமைக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
3/6
ஆபரேஷன் ரெட் எனும் பயோ வாரை தொடுக்கும் சீனாவை சேர்ந்த வில்லனை, போதி தர்மனின் வம்சாவழியை சேர்ந்த அரவிந்த் (சூர்யா) வைத்து மரபியல் ஆராய்ச்சி மாணவி சுபா (ஸ்ருதி ஹாசன்) எப்படி எதிர்க்கிறார் என்பதே படத்தின் கதை.
4/6
2019 ஆம் ஆண்டில் உலக மக்களை நடுங்க வைத்த கொரோனா வந்த போது, இந்த படத்தின் ரெஃபரன்ஸை குறித்து “அன்றே கணித்தார் சூர்யா” எனும் மீம்ஸ்கள் இணையத்தில் தீயாய் பரவியது.
5/6
நம்மில் பலருக்கு தெரியாத பல்லவ மன்னரான போதி தர்மனின் திறமைகளையும் புகழையும் இப்படம் விவரித்தது. ஓ ரிங்கா ஓ ரிங்கா எனும் பாடலுக்கு 1000 நடன கலைஞர்களை பயன்படுத்தப்பட்டது பேசுபொருளாக மாறியது.
Continues below advertisement
6/6
“சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமெல்லாம் ஓடாது..”, “மக்கள் இதையெல்லாம் விரும்பமாட்டார்கள்..”,“பழங்காலத்து வேடத்தில் சூர்யாவா..?” போன்ற கேலிகளையும் கிண்டல்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் ஏழாம் அறிவு படத்தின் வெற்றி அமைந்தது. நடிகர் சூர்யாவை புதியதொரு வகையில் காட்டிய இப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.
Sponsored Links by Taboola