Nayanthara Business : புதிய நாளில் புதியதொரு பயணம்.. பெண்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நயன்!
கோலிவுட்டின் க்யூட் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதங்களின் இரட்டை குழந்தைளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என பெயர் வைத்தனர்.
கணவர், குழந்தை என ஒரு பக்கம் வீட்டை கவனித்துக்கொள்ளும் நயன் பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
முதலில் லிப் பாம் கம்பெனி எனும் லிப் கேர் பிராண்டை தொடங்கினார். அடுத்ததாக ஸ்கின் 9 எனும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார்.
தற்போது ஃபெமி 9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்டை தொடங்கியுள்ளார்.
“விஜயதசமியின் இந்த புனித நாளில், ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியதால், எங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது. Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல; இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். இந்த அதிகாரமளிக்கும் முயற்சியைக் கொண்டாட எங்களுடன் சேருங்கள்! பெண்கள் ஒருவரையொருவர் உயர்த்தி ஊக்குவிக்கும் எதிர்காலம் இதோ...” என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நயன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -